நாட்டை உழுக்கிய மூன்று முக்கிய சம்பவங்கள்... விசாரணை மேற்கொள்ள மூன்று விசேட நீதிபதி குழாம்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம், ரத்துபஸ்வல பிரதேசத்தில் பிரதேசவாசிகள் மூவரை சுட்டுக் கொலை செய்து 45 பேருக்கு காயம் ஏற்படுத்தியமை,

இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றினை முன்னெடுத்து சென்றமை ஆகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய விஷேட மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஒன்றினை நியமித்துள்ளார்.

இந்த மூன்று சம்பவங்களையும் விஷேட குற்றங்களாக கருதி, இவற்றை விசாரிக்க மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பிரதம நீதியரசரை கோரியிருந்தார். அதன்படியே இந்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.