விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மெய்பாதுகாப்பாளராக இருந்த தமிழர் இவரா? தீயாய் பரவும் புகைப்படம்

முரளிதரனை திட்டுவதற்காக மலையகத்தமிழர்கள் மனம் நோகும் வார்த்தைப்பிரயோகங்களை பதிவிடாதீர்கள். விடுதலைக்காக அவர்கள் கொடுத்த விலையை திருப்பி செலுத்தவே முடியாது.

யுத்தகாலங்களில் வன்னிக்குபோன பலருடைய பிள்ளைகளை இருக்கிறார்களா? இல்லையா என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்களையும் நினைத்துப்பார்க்கவேண்டும்.

உதாரணமாக ஒரு புகைப்படம் மட்டும் வெளியாகியுள்ளது.

இப்புகைப்படத்தில் காணப்படுபவர் லெப்.கேணல் தேவன் அவர்கள். இவர் கண்டி மாவட்டத்தினை சேர்ந்தவர்.

குமாரசாமி அனுரகுமார் இயற்பெயர் கொண்ட இவர் 08.03.2009 இறுதியுத்தகாலப்பகுதியில் வீரமரணம் அடைந்துவிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் மெய்பாதுகாப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றிய தேவன் அவர்கள் பின்னாட்களில் நவம் அறிவுக்கூட பொறுப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றியிருந்தார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.