எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையானது குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 2 ரூபாவினாலும் மற்றும் சூப்பர் டீசல் 2 ரூபாவினாலும் குறைவடையவுள்ள நிலையில் ஓட்டோ டீசலில் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் புதிய எரிபொருள் விலை பின்வருமாறு :

ஒக்டேன் 92 - 136 ரூபா

ஒக்டேன் 95 - 161 ரூபா

சூப்பர் டீசல் - 132 ரூபா

ஒட்டோ டீசல் : 104 ரூபா