கோயில் அம்மன் தாலியையும் விட்ட வைக்காத காவாலிகள்

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெலிவத்தை தோட்டத்தில் அம்மன் ஆலயத்தை உடைத்து இரு அம்மன் சிலைகளில் காணப்பட்ட தாலிகள் களவாடப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கோயில் அர்ச்சகர் கோயிலை திறக்கும் போதே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உண்டியலில் இடப்பட்டிருந்த நாணயத்தாள்களும் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் திம்புள பத்தனை பொலிசாருக்கு முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.