தமிழர் என்று இவரை தயவுசெய்து சொல்லி விடாதீர்கள்! கொந்தளிக்கும் தமிழ் உறவுகள்

சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்!" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், கோத்தபாய ராஜபக்சவின் கூட்டத்தில் ஆலோசனை கூறியிருக்கிறார்.

ஷங்ரிலா விடுதியில் நேற்று நடந்த கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான வியத்மன அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற முரளிதரனிடம், சிறுபான்மைக் கட்சிகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தாம், "இந்த சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது என்றும், தமிழ், முஸ்லிம் என்ற பெயர்களில் கட்சிகளை உருவாக்க அனுமதி கொடுத்திருக்கக் கூடாது" என்றும் தாம் தெரிவித்ததாக முரளிதரன் கூறியிருக்கிறார்.

"இந்தியாவில் அதுபோன்ற கட்சிகள் இல்லை" என்றும் தாம் சுட்டிக்காட்டியதாகவும், ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

"2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்!" என்று, சிறிலங்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார் என்ற செய்தி தமிழ் மக்களை ஏற்கனவே விசனமூட்டிய நிலையில் இந்த செய்தி சிறுபான்மை மக்களை கோபமூட்ட செய்கின்றது.

கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ‘வியத்மக’ அமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா விடுதியில் இன்று மாலை நடந்த, இந்த மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

"சமாதான பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர்.

இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப் புலிகள் தவறிழைத்தனர். அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர்.

2009 இல், போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாகும்.

சிறிலங்காவை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும். அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே அடுத்த அதிபராக தெரிவு செய்யப்பட வேண்டும் .

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது. சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர்.

ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள, அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும்.

சில விடயங்களை சாதித்த, மக்களை பாதுகாக்கக் கூடிய ஒருவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மக்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம். அவ்வாறான தலைவருக்கே நான் வாக்களிப்பேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழனாக இருந்திருந்தால் தமிழினத்தின் வலி உணர்ந்திருப்பார். அவர் பாவம் அடையாளம் தொலைத்த மனிதராக உள்ளார்....

அவர் வீட்டில் இழவு வீழ்ந்திருந்தால் தெரிந்திருக்கும் தமிழினத்தின் வலி என்ன என்று...

என்ன சொல்லி திட்டி என்ன பயன்... நாய் வால்கள் நிமிரப்போவதில்லை...

தயவு செய்து தமிழர் என மறந்தும் இவரை சொல்லி விடாதீர்கள்... தமிழன்னைக்கு இவர் போல் இழிவு தேடித்தர இன்னமும் எத்தனை பேரோ...