கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலை

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை புத்தகங்கள் அச்சிடும் போது இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வி அமைச்சரை இன்று (08) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.