ருவன் விஜேவர்தன இராஜினாமா?

இராஜாங்க ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன பதவியிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச ஊடகமான ரூபவாஹினியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சிற்கு கீழ் கொண்டுவந்ததை அடுத்து ஊடக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை கண்டித்து நேற்று கடிதம் அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில் பதவியிலிருந்தும் விலகப்போவதாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும், ஆனால் பிரதமரிடமிருந்து பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.