மட்டக்களப்பு விரையும் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அவர் நாளை இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் 65 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தின் புதிய கட்டட தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மாநகரை அழகுபடுத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட திட்டத்திற்கமைய மாநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் இந்த தனியார் பேருந்து நிலையம் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.