மைத்திரியின் தம்பியை சஜித் சந்தித்த இரகசியம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவும் கொழும்பு ஜய்ஹில்டன் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பிற்காக இரண்டாம் பிரிவினரும் கலந்துகொண்டிருந்ததோடு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் டட்லி சிறிசேன ஆகியோர் இந்த இரண்டாம் தரப்பிரிவினருடன் நீண்டநேரக்கலந்துரையாடலை செய்திருக்கின்றனர்.

ஆனால் ஆழமாக பேசப்பட்ட விடயங்கள் இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

ஜனாதிபதியின் சகோதரரான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருகின்ற அதேவேளை, டட்லி சிறிசேனவுக்காக கோட்டாபய ராஜபக்ச விசேட இராவிருந்து ஒன்றையும் அவருடைய இல்லத்தில் நடத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.