ரிஷாட்டை சந்திக்க இலங்கை பறந்த கனிமொழி

திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் நாளை வியாழக்கிழமை பிற்பகலில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கொழும்பில் வைத்து சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அதேபோல மேலும் பல அரசியல் பிரமுகர்களை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.