சொகுசு ரயில் சேவை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு, கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு இன்று முதல் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இதன் முதல் பயணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து கொள்ளவுள்ளார்.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் மூன்றாவது மேடையிலிருந்து புலதிசி கடுகதி புகையிரதம் இன்று மாலை 3.05 மணிக்கு அதன் முதல் பயணத்தை தொடங்கவுள்ளது.

இவ்வாறு புறப்படும் குறித்த ‘புலதிசி’ புகையிரதம் இன்றிரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையவுள்ளது.

மேலும் குறித்த புகையிரதம், பொலன்னறுவையிலிருந்து நாளை மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு, கோட்டை நோக்கி பயணிக்கவுள்ளதோடு, இரவு 9.06 மணிக்கு கொழும்பு, கோட்டையை வந்தடையவுள்ளது.

பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குராக்கொட ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.