வரலாற்றில் முதல் முறை ஐஸ் மழையால் நிறைந்த மொனராகலை பகுதி! : மகிழ்ச்சியில் மக்கள்

மொனராகலை- மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில், இன்று புதன்கிழமை காலை ஐஸ் மழை பெய்துள்ளது.

சுமார் அரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளது.

வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில், அதிக நேரம் ஐஸ் மழை பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.