நெரிச்சலை தவிர்க்க முடியாத அளவிற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குவிந்த பயணிகள்!

வருடாந்த சா்வதேச போரா மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த போரா சமூகத்தினர், மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலையில், தற்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போரா மாநாட்டிற்காக 40 நாடுகளைச் சோ்ந்த 21 ஆயிரத்திற்கும் அதிகமான போரா சமூகத்தவா்கள், அண்மையில் இலங்கை வந்திருந்ததாக எமது செய்தியாளா் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிலவும் இடம் மற்றும் வசதிகள் போதியளவு இல்லாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பேச்சாளா் ஒருவா் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு பின்னணியில், இது போன்ற விசேட சந்தா்ப்பங்களின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நெரிசலைத் தவிர்க்க முடியாது என்றும் அந்தப் பேச்சாளா் மேலும் குறிப்பிட்டுள்ளார்,