மஹிந்த - ஹக்கீமின் வாரிசுகளிற்கு நாளை திருமணம்

இலங்கையின் முக்கிய இரண்டு அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளிற்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச- லிமினி ஜோடி நாளை திருமண பந்தத்தில் இணைகிறார்கள். தங்காலையில் இந்த திருமண நிகழ்வு நடக்கிறது.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் மகளின் திருமண வரவேற்பு நாளை கொழும்பில் நடக்கிறது.

இரண்டு நிகழ்விற்கும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவின் திருமண அழைப்பிதழ் வந்தபோது, ஆரம்பத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் மிரண்டு விட்டனர்.

பின்னர், அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்ற தகவல் கிடைத்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.