மூன்று மாவீரர்களின் குடும்பம் வறுமையில் வாடும் அவலம் : உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை!

தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மாவீரா்களாக கொடுத்துவிட்டு இன்று ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டமாக நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த குடும்பம்.

முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு பகுதியில் வசித்துவரும் இவர்கள் ஆறு அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் எமது சுகந்திர வாழ்வுக்காக தமது மூன்று பிள்ளையும் மாவீரார்களாக பறி கொடுத்து விட்டு இன்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகனுடன் மிகவும் வறுயைில் வாழ்ந்து வருகின்றார்கள்.

சிறு குடிசையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் இவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்து உதவுமாறு கோரியுள்ளனார் கருணையுள்ளம் கொணடவர்கள் இவர்களுக்கு உதவுமாறு கோருகின்றோம் .