பேரினால் முற்றாக குடும்பத்தையும் - விபத்தில் ஒரு காலை இழந்து தவிக்கும் இளைஞன்!

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக படுகொலையில் முற்றாக குடும்பத்தை இழந்தவர் தனது கால் ஒன்றையும் அண்மையில் விபத்தில் இழந்தார்.

"1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158 பொதுமக்கள், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

கப்டன் முனாஸ் என்ற இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத் உட்பட்ட இராணுவ குழு ஒன்றே இவர்களை பேருந்துகளில் கடத்திச் சென்று படுகொலை செய்தது.


இந்த சம்பவத்தில் குறிந்த இளைஞரின் தாய் தந்தை இரண்டு சகோதரிகள் உட்பட நான்கு பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

பின்னர் அம்மம்மாவின் பாதுகாப்பில் வளர்த்தார் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் தனது கால் ஒன்றையும் இழந்து மிகவும் தொழில் இன்றி வறுமையில் வாழ்ந்து வருகின்றார்.

திருமணம் செய்த போது உரிய வருமானம் இன்றி குடும்பம் கஷ்டமாக நிலையில் உள்ளது தனக்கு பொய்கால் ஒன்றை பெற்றுக்கொள்ள உதவி செய்யுமாறு கோரியுள்ளார் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவி செய்ய முன்வருங்கள்