ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் அதிரடி அறிவிப்பு

வெற்றியடைய முடியுமென்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும், இல்லையென்றால் போட்டியிடப் போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனத்திலுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தானே கட்சியை மீட்டெடுத்து பாதுகாத்ததாக குறிப்பிட்ட பிரதமர், 70 வயதுவரை கட்சியிலும் அரசியலிலும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தமையும் நினைவுகூர்ந்தார்.

அரசியலில் ஓய்வுபெறுவது என்பது அவ்வளவு கடினமான விடயமல்ல எனவும் பிரதமர் தெரிவித்தார்.