வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வழமை போல நாளை (16) திங்கட்கிழமை நடைபெறும் என வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளை இயங்காது என தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறான அறிவிப்புக்கள் எவையும் வெளியிடப்படவில்லை. எனவே, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.

பாடசாலைகள், அரச தி​ணைக்களங்கள் வழமை போலவே இயங்கும். குறிப்பாக பாடசாலைகள் அனைத்தும் இயங்கும். வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கல்வி அமைச்சு தற்போது எனது ஆளுகையின் கீழ் உள்ளது. நானோ அல்லது கல்வி அமைச்சின் செயலரோ அவ்வாறான அறிவித்தல்கள் எதனையும் விடுக்கவில்லை.

எனவே, வடக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்கள் எவ்வித குழப்பமும் அடைய வேண்டாம். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகளை வழமையாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பது போல் அனுப்பி வையுங்கள் என்றார்.