பிரச்சாரத்தில் இளைஞன் அணிந்த ஆடையால் எழுந்துள்ள மாபெரும் சர்ச்சை... எங்கே போகிறது தமிழ்த்தேசியம்!

தமிழ் தேசிய அரசியலை கையிலெடுப்பவர்கள் எப்படி சிங்களதேசியத்தின் உடையணிந்து போகலாம் குறைந்த பட்சம் இப்படியான விடயங்களில் தெளிவில்லாதவர்கள் எப்படி தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்தமுடியும் அல்லது திட்டமிட்டே தமிழ்த்தேசிய அரசியலை சிதைப்பதற்கான முயற்சியா?

எமது இனம் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்கும் சிங்களத்தின் தேசியக்கொடியை நெஞ்சிலே தாங்கியவன் என்ன நோக்கத்திற்காக தமிழ்த்தேசிய அரசியலில் தன்னை அடையாளப்படுத்தமுனைகிறான் அப்படியானால் யாரை பலப்படுத்துவதற்காக இந்த பிரச்சாரவேலைகள் நடைபெறுகின்றது.

இந்த பிரச்சாரத்தின் பின்னணியில் நிற்போருக்கு தமிழ்த்தேசிய அரசியலில் எவ்வளவிற்கு ஆளமான அறிவிருக்கின்றது என்ற பல்வகையான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது இந்த இளைஞனின் சிங்களத்தேசியத்தின் மீதான காதல்.