சஜித்திடம் இருந்து ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்! பேரதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்?

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை இந்த வாரத்திற்குள் நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாச.

ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை தாமதமின்றி பெயரிடுமாறு சஜித் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்காமல் இழுத்தடிப்பது, கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும் எனவும், ஜனநாயக நடைமுறைகளிற்கு எதிராக அமையும் எனவும் சஜித் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கவின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் சம்மதத்துடன் அல்லது வேறு வழிகளில் வேட்பாளர் உடனடியாக பெயரிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ரணில் வகுத்து வைத்திருந்த அனைத்து திட்டங்களும் தவிடு பெடியாகியுள்ளதாக குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் சஜித்தின் கடிதம் கட்சியின் முக்கியஸ்தர்களிற்கு பாரய ஏமாற்றத்தை அளித்துள்ளதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.