நாமலின் திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்! அங்கும் இங்கும் ஓடும் நண்பர்கள்..

நாமல் - லிமினி திருமண கொண்டாட்டம் கடந்த 12ம் திகதி தங்கல்லை கால்ட்டன் இல்லத்தில் இனிதே நிறைவடைந்தது.

பதிவு திருமணம் கொழும்பிலும் மற்றும் முக்கிய நிகழ்வு தங்கல்லையில் உள்ள கார்ல்டன் இல்லத்திலும் நடைபெற்றது.

திருமண நிகழ்வுகள் அனைத்தும் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தாலும் புதுத்தம்பதியினர் தற்போது சிக்கலில் மாற்றியுள்ளனர்.

புதிய ஜோடிக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இப்போது முட்கரண்டி பிரச்சினை தீர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

கார்ல்டன் இல்லத்தில் நடந்த திருமண விருந்துபசாரத்திற்கு கிட்டத்தட்ட 6,000 விருந்தாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர், ஆனால் அதே அளவிலான உணவை வழங்குவதற்கு போதுமான கரண்டி-முட்கரண்டிகளை தேடுவதற்கு நாமலுக்கு முடியாமல் போயுள்ளது.

இந்த சிக்கலை தீர்க்க, நமால் தனது நெருங்கிய நண்பர்களிடம் கரண்டிகள் கேட்டுள்ளார். இந்த முட்கரண்டிகள் கொழும்பில் வசிக்கும் நண்பர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது என்பது அறியப்படுகிறது.

இது தெரியாமல், திருமண விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஊழியர்கள் முட்கரண்டிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு கழுவி மேசையில் வைத்துள்ள நிலையில், நாமல் இதனை அறிந்து கோபமடைந்துள்ளார்.

இப்போது தம்பதியினர் எதை வாடகைக்கு வாங்கினோம் , நண்பர்களிடம் எதை வாங்கினோம் என்ற பிரச்னையை தீர்க்க வேண்டிய சிக்கலில் உள்ளனர்.

திருமணம் நிறைவடைந்து அதாவது கடந்த 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை நாமலும் - லிமினியும் அனைத்து வேலைகளை பின்தள்ளி தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து கரண்டிகளை தேடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமலின் திருமண விருந்துக்காக தங்கல்லைக்கு சென்ற சில நண்பர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்பிய பின்னர் தங்கள் கரண்டிகளை எடுக்க தங்கல்லைக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.