ஞான அக்காவை தேடிச் சென்ற கோட்டா! யார் இந்த ஞான அக்கா?

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அவரை "இலங்கையில் 21 ஆம் நூற்றாண்டின் தலைவர்" என்று குறிப்பிடுகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷவும் ஒரு விஞ்ஞான பார்வையின் அடிப்படையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களும் திறனும் தன்னிடம் இருப்பதைக் காட்ட ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும் இதன் உண்மையான நிலைமை மாறுபட்டது என கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஞான அக்காவின் ஒருங்கிணைப்பு அதிகாரி கம்மன்பில

கோட்டாபய ராஜபக்ஷ 21ம் நூற்றாண்டை விட்டு பக்கத்து வீட்டிற்கு செல்ல கூட அனுராதபுரத்தின் தெய்வமான அனுராதபுரம் ஞான அக்கா என்று அழைக்கப்படும் ஜோதிடம் பார்க்கும் பெண் குறித்து கொடுக்கும் நேரத்தில் தான் வெளியே செல்கிறார்.

கோட்டா அனுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் பக்தியுள்ள பக்தர், சில காலத்திற்கு முன்பு அவரது கோவிலுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.

அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, குறித்த கோவிலுக்கு வெளிப்படையாக செல்ல முடியவில்லை. அதனால் கோட்டாவிற்கு பதிலாக கோவில் தொடர்பாக அனைத்து நடவடிக்கைளையும் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில செய்து வருகிறார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் திறமையானவர்கள் இருக்க கம்மன்பில கோட்டாவுடன் நெருங்கிய உறவு மேற்கொள்வதற்கான ரகசியம் இதுதான்.

கம்மன்பில ஞான அக்காவின் கோவிலுக்கு வாரத்திற்கு பல முறை செல்லும் போது ஒரு மடிக்கணினி வைத்து அங்கேயே தனது அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்கிறார். சில நேரங்களில் அவர் ஞான அக்காவின் கோவிலில் தனது இரவு நேரத்தை கழித்து விடுகிறார்.

மஹிந்தவிற்கு இரண்டாவது அல்ல கோட்டா

மஹிந்த ராஜபக்ஷ மந்திர தந்திரங்கள், ஓமங்கள், யந்திரங்கள் என்ற மாயையில் ஆழமாக ஈடுபடும் ஒரு தலைவராக அறியப்படுகிறார்.

ஜோதிடங்களை நம்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜனாதிபதி தேர்தலை நடத்தியதன் மூலம் அவர் தனது அதிகாரத்தை இழந்தார் என்பதை முழு நாடும் அறிந்திருக்கிறது.

ராஜபக்ஷ முகாமில் இருந்து மஹிந்தவின் வாரிசாக இருக்கும் கோட்டாவும் இரண்டாம் நிலை மாயையில் சிக்கியிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.