நீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி? மீண்டும் பெரும் குழப்பம்

பௌத்த பிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்யும்படி குறிப்பிட்ட நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய ஞானசாரர் தலைமையிலான பிக்குகள் முயற்சிகள் ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றமும், மோதல் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் புதைக்க, ஞானசார தேரர் தரப்பு நடவடிக்கையெடுத்துள்ளது.