ஜனாதிபதித் தேர்தலில் மிக நீளமான வாக்குச்சீட்டு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் செலவு மாத்திரமன்றி, வாக்களிப்பு நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைப்பது, வாக்குப் பெட்டி இறக்குமதி செய்வது மற்றும் கூடுதல் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது போன்ற பல பிரச்சினைகள் எழுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கு வேட்பாளர்கள் அவர்களது ஒத்துழைப்பை வழங்க ​வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கடந்த தேர்தல் வாக்குச் சீட்டை விட இம்முறை இரட்டிப்பு நீளமான வாக்குச் சீட்டு அச்சிட வேண்டியுள்ளதாகவும், சிங்கள அகரவரிசைப்படி வாக்குச் சீட்டில் பெயர் உள்ளடக்கப்படும் என்றும், வேட்பாளர்கள் விரும்பினால் தமது பெயர்களின் முதல் எழுத்துக்களைக் குறைக்க முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.