கோட்டாவுக்கு ஆதரவு தொடர்பில் மைத்திரி அணி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு என சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவிருந்தது, ஆனால் அது நேற்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டபோதும் நேற்றும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கவில்லை.

ஆனால் உத்தியோகப்பூர்வமாக நாளை அறிவிக்கப்படும் என இதற்கு முன்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.