சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் மூலம் சஜித் பலமடைகிறார்! அமைச்சர் சுஜீவ சேனசிங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் தெரிவிக்கும் பல்வேறு கருத்துக்கள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பலமடைவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதியை நேற்று சந்தித்தாகவும் அதன் போது பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாத சுத்தமான கைகளை உடையவரே நாட்டை ஆள வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பர் என ஜனாதிபதி கூறியதாகவும் ஆனால் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

எனினும் ஒருசில அரசியல் தீர்மானங்களால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடபடலாம் எனவும் கட்சித் தாவும் செயற்பாடுகளை இதுவரை முழுமையாக அவதானிக்க வில்லை எனவும் எதிர்கட்சியில் இருந்து ஒருசிலர் மாத்திரம் ஐ.தே.கவுடன் இணைந்தாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 அல்லது 8 பேர் மேலும் ஐக்கிய தேசியக் கட்சியிவுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறினார்.

தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் இருப்பதாகவும் அந்த காலப்பகுதியில் அவர்கள் சரியான முடிவை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

சிறப்பான விளையாட்டுகளை எதிர்காலத்தில் பார்கக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் இது குறித்து அனைவரையும் தெளிவுப்படத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே சஜித் பிரேமதாச சொன்னதை சரிவர செய்பவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.