அனைத்து மக்களையும் வாழ வைக்க திட்டத்தை தயாரித்துள்ள கோத்தா!

மக்களின் வெற்றிக்கான இடதுசாரி பலம்’ எனும் தொனிப்பொருளில் ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட மாநாடு மாத்தறை உயன்வத்த விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச இந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, அனைத்து துறைகளிலும் உள்ள மக்களை வாழ வைப்பதற்கான பொருளாதாரத் திட்டத்தை தாம் தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளைத் தயாரித்துள்ளதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.