நாளை சஜித்தின் முதல் பேரணி

தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை நடைபெறவுள்ளது.

இதில் ஐதேக மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்தப் பேரணியில் பெரும் எண்ணிக்கையான ஐதேக ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

3 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களை இந்தப் பேரணியில் பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகளை ஐதேகவின் அமைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.