லொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..? லொஸ்லியாவின் அதிரடி அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாவதாக சாண்டி பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லொஸ்லியா. இவரை கோலிவுட் திரையுலகம் சிறப்பாக வரவேற்க காத்திருக்கின்றது.

கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்திலும் ‘ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் லொஸ்லியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லொஸ்லியா, தந்தையின் கண்டிப்புக்கு பின்னரும் காதலை கைவிடாமல் உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து லொஸ்லியா அளித்த முதல் பேட்டியில், ‘எனது அப்பா மிகவும் பாசமானவர்.

என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள்.

எனவே காதல் திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் எனது திருமணம் நடக்கும். என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள்.

நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்’ என்று கூறினார். கவின், லொஸ்லியா திருமணம் நடக்குமா? இருதரப்பு பெற்றோர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும்.