மைத்திரியிடம் இருந்து சஜித்தின் கூடாரத்திற்கு ஓடிய முக்கியஸ்தர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர் ஷிரால் லக்திலக தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அதற்காக தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சஜித் பிரேமதாஸ, தனது தேர்தல் பணிகளின் ஒரு பகுதியை ஷிரால் லக்திலகவுக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.