நாட்டை விட்டு வெளியேறும் கோத்தபாய

கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நடைபெறும் முதலாவது மக்கள் பேரணி நேற்று அனுராதபுரத்தில் உள்ள சல்காது மைதானத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக துமிந்த திசாநாயக்க, வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட ஸ்ரீ.ல.சு.க.வின் கொள்கை அறிக்கை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இதன் போது வழங்கப்பட உள்ளது.

மொட்டிற்கு ஆதரவளித்தால் துமிந்த திசாநாயக்க UNPயில் சேருவார் என்று கூறிய சில தரப்பினரின் கணிப்புகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அக்டோபர் 9 முதல் 12 வரை சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சை பெற கோட்டபய ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.