ரணிலுக்கு எதிராக அங்கயன் அணியின் இன்றைய திட்டம் புஸ்வானமானது

இன்று யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கும்போது, காணிகளை பறிகொடுத்த மக்கள் நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ் விமான நிலையம் மற்றும் விமான நிலைய நுழைவாயில், போக்குவரத்து பாதையென்பன தனியார் காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

காணிகளை பறிகொடுத்த மக்கள் இன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

இதேவேளை, இந்த விவகாரத்தை சிறிலங்கா சுதந்திரக்கட்சி- அங்கஜன் அணி தமது அரசியல் தேவைக்காக பாவிக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டு, போராட்ட அறிவிப்பை கைவிட்டுள்ளனர் மக்கள்.

போராட்டத்திற்கு திட்டமிட்ட மக்களை இன்று அணுகிய அங்கயன் அணி, தாமும் 300 பேருடன் வருவதாகவும், காலை ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமென்றும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

எனினும், இதை பிரதேச மக்கள் நிராகரித்துள்ளனர். அத்துடன், அரசியல் தரப்புக்கள் தமக்கேற்ற விதத்தில் அதை திரிவுபடுத்த முயல்வதால் இன்றைய போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று காலை பிரதேச மக்களின் பெயரில், தனது ஆதரவாளர்களை வைத்து ரணிலிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்த அங்கஜன் அணி திட்டமிட்டு வருகிறது.