ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தரும் இரகசிய அறிக்கை

கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை விட்டுக் கடந்து சென்ற ஒரு இரகசிய அறிக்கை இன்று கிடைத்தது பகிர்ந்து கொள்வோம் என தனது கட்டுரைப்பக்கத்தில் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

ஏதோ என்னை கோத்தபாய ஆதரவு என்று யாராவது வந்தால் வந்த வழியே ஓடிப் போயிடணும்.

நாடு முழுவதும் இருந்து அளிக்கப்படக் கூடிய மொத்த வாக்குகள் அதாவது மக்களால் அளிக்கக்கூடிய / எதிர்பார்க்கும் வாக்குகள் சுமார் 1 கோடியே 23 லட்சம் வாக்குகள்..

இந்த வாக்குகளில் பிரதானமான 3 வேட்பாளர்கள் சஜித் - கோத்தபாய - அனுரகுமார .

மற்ற சில்லறை எல்லாம் கணக்கில் இல்லை .

இம்முறை JVP அனுரகுமார 6 வீதமான வாக்குகளை பிரிப்பார் என்று அந்த அறிக்கை . சொல்லியுள்ளது.

மற்றும் அந்த அறிக்கையில் கோத்தாவுக்கு 48 வீதமும் சஜித்துக்கு 45 வீதமும் தற்போதைய நிலை என்றும் சொல்லியுள்ளது.

இறுதியாக இன்னும் 2 அறிக்கைகள் வெளியாகுமாம் , ஆக கோத்தா வெற்றியின் முன்னணியில் .

ஆனால் எமது பார்வையில் அனுரகுமார / JVP சுமார் 8-9 லட்சம் வாக்குகள் பெறுகின்றார் .சுமார் 8-9 வீதம் . செல்லுபடியான வாக்குகளாக.

இப்போது கிடைக்கும் மொத்த வாக்குகளில் / 1 கோடியே 23 லட்சம் வாக்குகளில் ஜேவிபி சுமார் 9 லட்சம் பிரிக்கும் சேதாரம மற்றும் ஏனைய கழிவுகள் போக சுமார் 1 கோடியே 09 லட்சம் வாக்குகள் .

இந்த வாக்குகளுக்குத்தான் இங்கு சக்களத்தி சண்டை ஆனால் மொட்டுவுக்கு கடந்த உள்ளூர் தேர்தலின் போது 50 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது .

மொட்டு அணி ஜனாதிபதியை பெற வேண்டுமானால் தற்போதைய நிலையில் மகிந்தர் அணிக்கு 5 லட்சம் வாக்குகள் மேலதிகமாக வேண்டும்..

இந்த 5 லட்சம் வாக்குகளை வடகிழக்கில் இருந்துதான் அதுவும் தமிழ் முஸ்லிம் மக்களிடம் இருந்துதான் பிரித்தெடுக்க முடிவு .இங்குதான் இலக்கு ..

அதன் ஒரு பிரதானி Dr.MLAM ஹிஸ்புல்லாஹ்.

அடுத்தவர் வியாழன் ..அடுத்த படை பிள்ளையான் அணி மற்றும் கருணா அணி ..

இந்த அணிகள் மட்டக்களப்பில் மகிந்தர் அணிக்காக வாக்கு வேட்டை செய்வார்கள் .

இதில் ஹிஸ்புல்லாஹ். நல்லதொரு தந்திரோபாயத்துடன் வந்துள்ளார். அதாவது சஜித் அணிக்கு அளிக்கக்கூடிய வாக்குகளை தட்டிப்பறித்து.

இது சாத்தியமே .

ஹிஸ்புல்லாஹ். நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரம் வாக்குகளை தட்டிப் பறிக்கலாம் .

நாம் ஏற்கனவே பல ஆய்வுகளில் சொல்லியுள்ளோம் இம்முறை ஜனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்று வாக்கில்தான் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.

அதாவது முதல் சுற்றில் யாருக்கும் 50- 51 வீதம் இல்லை என்றால் /கிடைக்கவில்லை என்றால் இரண்டாம் சுற்று / இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் .

ஆனால் அதற்கான வாய்ப்பு அரிதாகி வருகின்றது ,மஹிந்த வியூகம் 7 மாகாணங்களைக் கைப்பற்றுவது .

ஆனால் 6 மாகாணங்களில் மொட்டு வெற்றி பெறும் வாய்ப்புள்ளது எனலாம் .

அப்போது மகிந்தர் அணி வெற்றி பெறும் மிக அதி வாய்ப்பு .. இது மும்முனை போட்டியும் அதற்கு மேலும் .

கோத்தாபாய / மகிந்தர் அணியின் குறி என்பது வாக்களிப்பு வீதத்தை குறிப்பாக வடக்கில் வாக்களிப்பு வீதத்தை குறைக்க வேண்டும் .

மறுபுறம் வடகிழக்கில் கோத்தாபாய / மகிந்தர் அணி தன் பக்கம் வாக்கு வேட்டை செய்ய வேண்டும் ..

ஆக வடகிழக்கில் அதிலும் விசேடமாக வடக்கில் இருந்துதான் 3 லட்சம் வாக்கு வேட்டை செய்யும் ஒரு பாரிய திட்டம் உள்ளது .

கிழக்கு மாகாணம் திருமலையில் இரண்டு தொகுதிகள் திருமலை ,மூதூர் தொகுதிகளில் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் மொட்டு அணியை விட சஜித் பெறுகின்றார்.

வடகிழக்கு சிங்கள பகுதிகள் மற்றும் எல்லைக் கிராமங்கள் 80-85 வீதம் மொட்டு அணிக்கு வாக்களிகின்றது

மட்டுவில் பிள்ளையான் அணி வியாழன் அணி சுமார் 3 ஆயிரம் கோத்தாவுக்கு பெற்றுக் கொடுக்குமாம்.

அம்பாறையில் கோத்தாபாய வெற்றி பெறுகின்றார்

வடக்கில்தான் கோத்தாவுக்கு இல்லையே!

வடக்கில் மக்கள் வாக்களிப்பை தடுக்க அல்லது TNA இந்த தேர்தலை பகிஷ்கரிப்பு செய்துள்ளது என்று துண்டுப்பிரசுரங்கள் மீண்டும் கடந்த தேர்தலைப் போன்று வெளியாகலாம்

ஆனால இறுதி நிலவரத்தில் கோத்தாவுக்கு 52-53 வீதமும் சஜித்க்கு 43-45 வீதமும் மாறலாம் .மிதக்கும் / ப்லோட்டிங் வோட்ஸ் வெற்றியைக் கொண்டு வரும்.

நாட்கள் நெருங்கும்போது மகிந்தர் அணி பல வித்தைகள காட்டும் .அவைகள் மகிந்தர் அணிக்கு சார்பாக /சாதகமாக மாறும் .

இங்கு அறிக்கை என்பது #குறி கொண்டது இறுதி அறிக்கையும் கிடைக்கும் !.பாப்போம் .....