தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த பிரபலத்தின் முக்கியஸ்தர் கோத்தாவிடம் சரணாகதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேசியம் சுயநிர்ணயம் மக்கள் அபிலாசைகள் என்று பேசப்பட்டு வாதாடப்பட்டு வந்த நிலையில் இன்று அவை எதுவும் இல்லாமல் வெறும் வாய்ப்பேச்சோ நின்றுவிட்டது.

குறிப்பாக தமிழ் தேசியத்தின் அச்சாணியாக இருந்த தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் போக்கும் எந்தளவிற்கு தற்போது தடம் மாறியிருக்கிறது என்பதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவிக்கு புதுக்குடியிருப்பை சேர்ந்த தர்மலிங்கம் நவநீதன் என்றும் நபரைக் கொண்டுவந்து சேர்ந்திருந்தார்.

புதுக்குடியிருப்பை சொந்த இடமாக கொண்ட தர்மலிங்கம் நவநீதன் தற்போது கோத்தபாயவின் பக்கம் சாய்ந்திருப்பது தமிழரசுக் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

தேசியம் கொள்கை சுயநிர்ணயம் தியாகம் என்று எதையும் அடிப்படையாகக் கொள்ளாமல் தெருக்களில் நிற்பவர்களையும் அரசியல் பட்டறிவற்றவர்களையும் தமிழ் தேசிய அரசியலுக்குள் கொண்டுவந்திருக்கிறார் சிவமோகன் உட்பட அனைத்து தலைவர்களும்.

குறிப்பாக சிவமோகன் அரசியலுக்குள் கொண்டுவந்த 90 வீதமானவர்கள் இதே பாணியிலானவர்கள் தான் என்பதை காணமுடிகிறது.

இன்று கோத்தபாய பக்கம் சாய்ந்த கோத்தபாயவின் மேடையில் ஏறிய புதுக்குடியிருப்பை சேர்ந்த தர்மலிங்கம் நவநீதன் இதற்குப் பெரும் சாட்சி.

உண்மையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் யாருக்கானது? எதை நோக்கி நகர்கின்றது என்று பொதுமக்கள் அங்களாய்க்கத் தொடங்கியுள்ளார்.

கள்ளன் - காவாலிகளின் கூடாரமாக மாறுவது மிக வேதனை என மேலும் மக்கள் கூறுகின்றனர்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த தர்மலிங்கம் நவநீதன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் இணைப்பாளராக இருந்தவர் என்பது வன்னி மண் முழுவதுமே தெரிந்ததுடன் அன்றும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் வைத்தியராக இருந்த காலத்தில் அவரின் மிக நெருங்கிய விசுவாசியாக செயற்பட்டமையும் சகலரும் அறிந்த விடயம்.