வவுனியா பஸ் நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்ட நபர்! சோதனையிட்ட பொலிஸாருக்கு சிக்கிய மர்ம பொருள்

யாழ்ப்பாணத்திலிருந்து கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் இரவு 8.45மணியளவில் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து முதூர் நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்டமாக நின்ற முதூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடையவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் சுமார் 1கிலோ 850கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.