பசில் வெளியிட்டுள்ள முக்கிய உத்தரவு

தமிழ் தேசிய கூட்டணி எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு போன்ற தலைப்புகள் மூலம் கற்பனைகளை உருவாக்குவதற்கு பதிலாக பிரதான பிரச்சார திட்டத்தை, அதாவது கோட்டாபய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனத்தை மக்களிடம் மத்தியில் கொண்டுசெல்ல முழு சக்தியையும் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிறுவனர் பசில் ராஜபக்ஷ கட்சிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால பிரச்சினைகளில் செயல்படுவது இந்த நேரத்தில் பொருத்தமானதல்ல என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசேடமாக கடந்த நாட்கள் சிலவற்றில் மொட்டின் பிரச்சார நடவடிக்கை முழுமையாக மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் ஒப்பந்தத்தை எதிர்த்து மேற்கொண்டபோதிலும் இறுதியில் புள்ளிகளை பெற்றுக்கொண்டது சஜித் பிரேமதாச என சுட்டிக்காட்டிய பெசில் ராஜபக்ஷ, இறுதி வாரத்திற்குள் எதிரிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு பதிலாக, தங்கள் விஞ்ஞாபனத்தை முடிந்தவரை பலரிடம் எடுத்துச் சென்று மிதமான வாக்காளர்களை வெல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் நிவாரணப் பொதியும் இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் தேவையற்ற விடயங்களுக்கு பதிலளிப்பதற்கு நேரத்தை செலவிடாமல், கட்சியின் முழு பொறிமுறையும் பிரதான பிரச்சாரத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் கடுமையாக வலியுறுத்தியதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.