சஜித்தின் பேரணிக்கு பெருந்திரள் மக்கள்! கலக்கத்தில் கோத்தபாய

ஐக்கிய தேசிய கட்சியுடனான ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் மக்கள் பேரணிக்காக பெருந்திரளான மக்கள் பங்குபற்றுவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடுமையான பிரச்சினைகள் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் (06) இரவு பண்டாரவலை நகரில் நடைபெற்ற பேரணியிலும் நேற்று தெனியாய, அகுரேஸ்ஸ மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகைதந்திருந்த பெரும்பான்மையான மக்களை பார்த்து மொட்டிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக மக்கள் படையை காண்பித்து எதிர்தரப்பினரை அச்சுறுத்துவதற்கான உளவியல் நடவடிக்கை இதுவரை வெற்றிகரமாக செய்து வந்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பதால் சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையான மக்கள் படையை காண்பிக்க முடிந்ததன் மூலம் மொட்டு தனது வழிமுறைகளை மாற்றியமைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றும் கூட்டங்களில் மக்கள் படையின் குறைவு இல்லாவிட்டாலும் அவர் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று கூட்டங்களை நடத்தையில் சஜித் பிரேமதாச அதில் இருமடங்கு கூட்டங்களில் உரையாற்றுவதுடன் அந்த ஒவ்வொரு கூட்டங்களிலும் அதிகமான மக்கள் கலந்துகொள்வதனால் மொட்டின் அடிமட்ட உறுப்பினர்களில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்து கொள்ளும் மக்கள் படையை கருத்தில் கொண்டு தேர்தல் முடிவுகளை கணிப்பது ஒரு நல்ல அளவுகோல் அல்ல, என்பதால் அவர்கள் நிலைமையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.