வவுனியாவில் ஊழல் வாதி உதயராசாவை துாக்கிய அதிகாரிகள்...

வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா உடன் அழுலுக்கு வரும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பல்வேறு காணி மோசடிகளில் ஈடுபட்டதாக விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலகுவாக மாவட்ட செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் புலம்பெயர்ந்தவர்கள் உட்பட அரச காணிகளை முறையற்ற விதத்தில் கையாடல் செய்தமை தொடுர்பாக ஊழலற்ற மக்கள் அமைப்பினர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பல முறைப்பாடுகளை அரசாங்க அதிபர் மனித உரிமை ஆணைக்குழு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் காணி அமைச்சுக்கும் ஆதாரபூர்வமாக ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தனர்.

இதன் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்க்பபட்ட விசாரணையிலும் மோசடிகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் மேலும் காணி முறைக்கேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக வவுனியா பிரதேச செயலாளரை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இணைப்பு செய்து மாற்றப்பட்டள்ளார்.