இலங்கையை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா! எதற்கு தெரியுமா?

அதிபர் தேர்தலுக்கு இன்னமும், 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அண்டை நாடான இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“இலங்கை தனது நாட்டில் எந்தவொரு சீன இராணுவ சொத்துக்களையும், அதன் பிராந்தியத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அனுமதிக்காது என்பது உள்ளிட்ட தனது மூலோபாய நலன்களை கொழும்பு பாதுகாக்க வேண்டும் என்றும், இந்தியா விரும்புவதாக, குறித்த ஊடகம் அறிகிறது.

சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பில் தரித்து நிற்க அனுமதித்ததன் மூலம், மஹிந்த ராஜபக்ச இந்தியாவை எரிச்சலூட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மிக உயர்ந்த மட்டத்தில் எழுப்பப்பட்டது.

இராணுவ சொத்துக்கள் தவிர, இலங்கையின் எந்தவொரு வெளிச்சக்தியும் உருவாக்கக் கூடிய மூலோபாய நிறுவல்கள் குறித்து இந்தியாவுக்கு கரிசனைகள் உள்ளன.

“இலங்கையின் நலன்கள் குறித்து இந்தியா உணர்ந்திருக்கும் அதேவேளை, அங்கு அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயல்படும். கொழும்பின் எந்தவொரு புதிய மாற்றமும், பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்” என்று இந்த விடயம் பற்றி அறிந்த ஒருவர் கூறினார்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், இலங்கையின் சீனாவின் மூலோபாய நகர்வுகள் இந்தியாவினால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது.

பின்னர், சிறிசேன அரசாங்கத்தின் கீழ், இந்தியா தனது மூலோபாய நலன்களைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது.

இலங்கையின் வளர்ந்து வரும் பயங்கரவாத வலையமைப்பு மற்றும் தமிழ்நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் தொடர்புகள் குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது.” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.