கோத்தபாயவிற்கு மீண்டும் ஒரு திடீர் நெருக்கடி! குழப்பத்தில் மகிந்த - பசில்

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக தனது முழுமையான சக்தியையும் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியுற்றதால் அவர்களுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எந்த எண்ணமும் இல்லை என வாதமொன்று அந்த கட்சியினுள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரிகா பண்டாரநாயக்க ஏற்கனவே ஸ்ரீலசுக ஆசன அமைப்பாளர்கள் பெரும்பான்மையினருடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இருப்பதனால் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றாலும் ஸ்ரீலசுக எம்.பி குழுவுக்கு உறுதியளித்த அமைச்சர் பதவிகளை வழங்க கூடாது என மொட்டின் பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளது.

அதேபோல் ஸ்ரீலசுக எம்பிக்களுக்கு மொட்டின் மேடையில் ஏறுவதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் மொட்டு ஆதரவாளர்களால் அவர்களை நிராகரித்துள்ளதால் அவர்களுடன் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தேவையில்லை என மொட்டு தரப்பினர் வாதம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

30% வேட்புமனுக்களை வழங்குவதற்கான விருப்பம் மொட்டிற்கு இல்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஸ்ரீலசுக எம்பிக்கள் குழுக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பதவிகள் எதுவும் கிடைக்காத நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும் இது தொடர்பாக இறுதி தீர்மானம் மொட்டினால் இதுவரை எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.