மகிந்தவின் கூடாரத்தில் பலர் தலைமறைவு! அதிர்ச்சியில் சகாக்கள்..

கேகாலையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பிரச்சார கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அந்த பிரதேச தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்த விடயம் பெரமுன வட்டாரங்களிற்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் கேகாலையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய, பிரதியமைச்சர் துஷ்யந்த மித்ரபால ஆகியோர் கலந்து கொண்டிருக்கவில்லை.

கேகாலையின் வலுவான அரசியல் தலைவர்களான அவர்கள் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளாதது, பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் பரபரப்பான விடயமான விவாதிக்கப்பட்டது.

இதேவேளை, கூட்டத்திற்கு வரும் மஹிந்த ராஜபக்ச, ருவன்வெல்லவிலுள்ள ரஞ்சித் சியாம்பலபிட்டியவின் இல்லத்திற்கு வருவதாக அறிவித்துள்ளதால், அவரை வரவேற்க அங்கு காத்திருப்பதாக சுதந்திரக்கட்சியின் ஆரநாயக்க இணை அமைப்பாளர் தீப்தி சுமனரத்ன, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய, துஷ்மந்த மித்ரபால இருவரும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், அடையாளத்தை வெளிப்படுத்தாத இன்னொரு சுதந்திரக்கட்சி மாவட்ட அமைப்பாளர், சியாம்பலபிட்டி, மித்ரபாலா உள்ளிட்ட சில சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் பெரமுனவின் கேகாலை பிரச்சார கூட்ட பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.