பதவியை இராஜினாமா செய்கின்றார் மஹிந்த தேசப்பிரிய

அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதமும் எழுதப்பட்டுவிட்டதாகவும், அது தனது அலுவலக அறையின் மேசையில் வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றவுடன் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கனவே தாம் தெரிவித்திருந்ததை நினைவுபடுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், வழங்கப்படுகின்ற இந்த நேர்காணல் ஒருவேளை தனது பதவியிலிருக்கும் காலத்தில் வழங்கும் இறுதி நேர்காணலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.