பிரான்ஸ் லாசப்பலில் தமிழருக்கு நேர்ந்த கதி!! காவல்துறை அவசர அறிவிப்பு

பரிஸ்-தமிழர் வர்த்தக பகுதியான லாசப்பல் 23 rue Philippe de Girard வீதியில் கடந்த ஒக்ரோபர் 17ம் நாள் இரவு 23h30 மணியளவில் வன்முறைக்கு உள்ளாகியுள்ள கோமா நிலையில் கவலைக்கிடமாக உள்ள இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் உதவியினை காவல்துறை கோரியுள்ளது.

2 அல்லது 3 இனந்தெரியாத நபர்களினால் திருடும் பொருட்டு, 55 வயது மதிக்கதக்க குறித்த நபர் மீது வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்திலேயே கோமா நிலைக்கு சென்றுள்ள இவர், தற்போது கோமா நிலையில் கவலைக்கிடமாக உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வன்முறைச் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குறித்த 0800 00 27 08

( pppj-appelatemoin@interieur.gouv.fr )இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட தகவல்களை தருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 55 வயது மதிக்கத்தக்கவர் தமிழர் என தெரிவித்துள்ளது.