கட்டுநாயக்க விமான நிலையத்தில் வகை தொகையின்றி குவியும் வெளிநாட்டவர்கள்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கு வெளிநாட்டில் இருந்து இலங்கையர்கள் பெருமளவானோர் நாடு திரும்பியுள்ளனர்.

இன்றும் நேற்றும் அதிகளவானர்கள் இலங்கை வந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பும் இலங்கையர்களை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சென்றுள்ளனர்.

விமான நிலையத்தினுள் மக்கள் வெற்றி கோஷம் எழும்பி ஆதரவாளர்களை வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தாம் நாடு திரும்பியுள்ளதாக பெருமளவு இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.