பாரிய பின்னடவை கண்ட ஜனாதிபதி வேட்பாளர்...யாழில் தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராத சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கில் மக்கள் மத்தியில் பெரிதும் அறிமுகம் இல்லாத ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை வட மாகாணத்தில் அநுரகுமார திசாநாயக்க பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதும் பாரிய பின்னடைவை கண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக அநுரகுமார திசநாயக்க இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் எந்தவித தேர்தல் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளாத கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச இவ்வாறான கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது பெரிதும் சிந்திக்க வைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் சின்னம் மற்றும் பெயரில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இவ்வாறு வாக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.

அன்னம் சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு பதிலாக கழுகு சின்னத்திற்கு வாக்களித்திருக்கலாம் அல்லது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க வாக்களிப்பதற்கு பதிலான ஆரியவன்ச திசநாயக்க வாக்களித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.