பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.

ஜனாதிபதியாக கோட்டா பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.

இராணுவத்தின் 53 வது படையணிக்கு இறுதிப்போரின்போது கமல் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த தகவலை முழுமையாக பாதுகாப்பு அமைச்சிசு உறுதிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.