ரணிலின் கூட்டத்தை புறக்கணித்தார் சஜித்

ஜனாதிபதித் தேர்தலில் இறுதி பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரிமாளிகையில் அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மட்டும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, கட்சியின் பிரதித் தலைவர் பதவியைத் துறந்த சஜித் பிரேமதாஸ, அமைச்சர் பதவியையும் இன்று இராஜினாமா செய்வார் என அறியமுடிகின்றது.