ஜனாதிபதியின் புதிய செயலாளராக பி.பி. ஜெயசுந்தர நியமனம்?

ஜனாதிபதியின் புதிய செயலாளராக டொக்டர் பி.பி. ஜெயசுந்தர நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில் நாளைய தினம ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஜனாதிபதியின் செயலாளராக பி.பி. ஜெயசுந்தர நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.