புதிய ஜனாதிபதியின் நிகழ்விற்கு சென்ற ஐ.தே.க அமைச்சர்களை அடித்துக் கலைத்த மக்கள்...

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச நேற்று அநுராதபுரத்தில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்விற்கு வந்த ஐ.தே.க பிரமுகர்களிற்கு மக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருவன்வெலிசாயவில் நேற்று காலை நடந்த பதவியேற்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

பின்னர், அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்த்தன, ஜோன் அமரதுங்க, தயா கமகே, அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நிகழ்விற்கு வந்தது.

இதன்போது, பெரமன ஆதரவாளர்கள் சூழ்ந்து அவர்களிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் சத்தமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடிமைகளே இங்கு வர வேண்டாம், திரும்பிச் செல்லுங்கள் என கூச்சலிட்டனர். எனினும், ஐ.தே.க பிரமுகர்கள் சிரித்தபடி அந்த சூழலை சமாளித்தனர்.