தேர்தல் ஆணைக்குழுவின் சுதந்திரம் தொடர வேண்டும்

தேர்தல் ஆணைக்குழு தற்போது அனுபவிக்கும் சுதந்திரம் தொடர வேண்டுமென்பதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான, சுதந்திரமான மற்றும் நியாயமானதாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த சுதந்திரம் நிலவுவதைக் காண வேண்டும் என்பது எனது விருப்பம்.

அமைதியான தேர்தலை நடத்த உதவிய தேர்தல் ஆணைக்குழு தலைவர், அரச ஊழியர்கள், காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

புதிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.